சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி முத்தியால்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் சுயேச்சை வேட்பாளர் சந்துருஜிக்கு பெண்கள் அமோக வரவேற்பு அளித்தனர். முத்தியால்பேட்டையில் சுயேச்சையாக வேட்பாளராக சந்துருஜி போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அங்காளம்மன் நகர், முத்தையா முதலியார் வீதி மற்றும் விஸ்வநாதன் நகரில் வீடு வீடாக சென்று தொகுதியில் தான் செய்த நலப்ணிகளை கூறி துண்டு பிரசுரம் கொடுத்து ஓட்டு சேகரித்தார். அப்போது சுயேச்சை வேட்பாளர் சந்துருஜிக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர். தாங்கள் காஸ் ஸ்டவ் சின்னத்தில் ஓட்டு அளிப்போம் என, கூறினர். தொடர்ந்து, தனக்கு காஸ் ஸ்டவ் சின்னத்தில் ஓட்டு அளித்து, தன்னை சபைக்கு தேர்வு செய்தால் முத்தியால்பேட்டை தொகுதியை புதுச்சேரியின் முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் என, கூறினார். ஓட்டு சேகரிப்பின் போது, அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.