உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சரவணன், நேற்று தொகுதியில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். பாவாணர் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்து வேட்பாளர் சரவணன் பேசுகையில், 'உழவர்கரை தொகுதியில் நான் உங்களை மட்டுமே நம்பி சுயேச்சையாக போட்டியிடுகிறேன். தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக பணியில் ஈடுபட்டு வந்துள்ளது உங்கள் அனைவருக்கம் தெரியும். உங்கள் அனைவரின் நம்பிக்கையும் பெற்றுள்ளேன். எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பளித்து வெற்றி பெற செய்தால், உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களையே நம்பி உள்ள எனக்கு இந்தமுறை குக்கர் சின்னத்திற்கு ஓட்டுப்போட்டு பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை