மேலும் செய்திகள்
தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்
11-Mar-2025
புதுச்சேரி: சபாநாயகர் டென்ஷனானதால், சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு தனது மானிய கோரிக்கை உரையை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், நேற்று காலை 11:10 மணிக்கு சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு பேச ஆரம்பித்தார். 12 மணியை கடந்ததால் சபாநாயகர் செல்வம் உரையை விரைவாக முடியுங்கள் என கோரினார். தி.மு.க., எம்.எல்.ஏ.க்களும் எங்களுக்கும் இதுபோல் பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், நேரு எம்.எல்.ஏ., பகல் 12:45 மணியை தாண்டி பேசிக் கொண்டிருந்தார். இதனால் டென்ஷனான சபாநாயகர் செல்வம், எவ்வளவு நேரம் தான் பேசுவீர்கள், விரைவாக முடியுங்கள், மற்றவர்கள் பேச வேண்டாமா என கோபமாக கூறினார்.இதனால் கோபமடைந்த நேரு எம்.எல்.ஏ., தனது கையில் வைத்திருந்த மானிய கோரிக்கை உரையை மேசை மீது வீசி, என்னை ஏன் பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இங்கு ஊழல்கள் நடக்கிறது. அதை பற்றி பேச தடுக்கிறீர்கள் என கூறினார்.மேசை மீது விசிய உரையை கிழித்து வீசி, 'என் பணியை தடுக்கிறீர்கள்' என கூறி அமர்ந்தார்.
11-Mar-2025