உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

 தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

அரியாங்குப்பம்: தொழில் உரிமத்தை புதுப்பித்து, சட்ட நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும் என, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: அரியாங்குப்பம் கொம்யூன் பகுதியில் பல தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழில் செய்பவர்கள் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும்.தொழில் உரிமம் பெற்றவர்கள், வரும் நிதியாண்டிற்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க, வரும் 28ம் தேதிக்குள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுக வேண்டும். அல்லது www.lgrams.py.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிர்த்து கொள்ள வேண்டும். வணிக வரி உரிமம் தொடர்பாக, துறை மூலம் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ