உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

திருக்கனுார் : திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மதகடிப்பட்டு, மணக்கு விநாயகர் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் சரோஜா, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண் அலுவலர் சிவக்குமார் தோட்டக்கலை பிரிவில் (நம் வீடு, நம் நலம்) திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார். தனியார் நிறுவன உதவி மேலாளர் பாஸ்கர், தேக்கு, செம்மரம், சவுக்கு மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் வேளாண் காடுகள் குறித்து விளக்கினார்.உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், களப்பணியாளர் தங்கத்துரை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சோம்பட்டு, செட்டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு உட்பட பல கிராம விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உழவர் உதவியக ஊழியர்கள், காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ