உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகள் மீட்டு தரப்படும்

 நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகள் மீட்டு தரப்படும்

புதுச்சேரி: கவர்னர் அனுமதி பெற்று பி.என்.எல். நிறுவன சொத்துக்களை ஏலம் விட்டு வங்கிகளில் உள்ள அடமான நகைகள் மீட்டுத்தரப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். பாண்டிச்சேரி வங்கி சாரா முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்: புதுச்சேரியில் பி.என்.எல்.,நிதி நிறுவனத்தை கண்ணன், பாஸ்கரன், நடராஜன் உள்ளிட்ட பங்குதாரர்கள் நடத்தி வந்தனர். அதில்,பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து, நகைகளை அடமானம் வைத்திருந்தனர். கடந்த 2004ம் ஆண்டு நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு உயர்நீதிமன்றம் பணம் மற்றும் நகைகளை திருப்பி கொடுக்க உத்திரவிட்டது. சரிவர கண்காணித்து கொடுக்க முன்னாள் நீதிபதி மாலா தலைமையில் வழக்கறிஞர்திருமாவளவன் அடங்கிய 2 பேர் குழு நியமித்தது. அக்குழு பணம் முதலீடு செய்தவர்களுக்குபெற்று கொடுத்தது. ஆனால், நகை அடமானம் வைத்த 90 சதவீதம் பேருக்கு இதுவரையில் அடமான நகைகள் கிடைக்கவில்லை. குழுவிடம் கேட்டபோது, மக்கள் அடமானம் வைத்த நகைகளை பி.என்.எல்., நிதி நிறுவனம்வங்கிகளில் மறு அடமானம் வைத்துள்ளதால், நிறுவனத்தினர் மீது வழக்கு தொடரும்படி அறிவுறுத்தியது. ஆகையால், பி.என்.எல்., நிறுவன உரிமையாளர்கள் மீது அரசே கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, தனி வழக்கறிஞரை நியமித்து, அடமானநகைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட முதல்வர் ரங்கசாமி, கவர்னர் அனுமதி பெற்று பி.என்.எல்., நிறுவன சொத்துக்களை ஏலம் விட்டு வங்கிகளில் உள்ள அடமான நகைகள் மீட்டுத்தரப்படும் என உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை