உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு ஆணையத்தை தடை செய்ய வேண்டும்; கராத்தே வளவன் வலியுறுத்தல்

விளையாட்டு ஆணையத்தை தடை செய்ய வேண்டும்; கராத்தே வளவன் வலியுறுத்தல்

புதுச்சேரி; மாநில விளையாட்டு கவுன்சிலில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவர் கராத்தே வளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் விளையாட்டுக் கொள்கையும் மாநிலத்தில் இல்லை.மாநில விளையாட்டு கவுன்சில் 2006ம் ஆண்டு முதல் எந்த ஒரு கணக்கு வழக்குகளை பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலும், ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய கணக்கு வழக்குகளை ரெஜிஸ்டர் ஆப் சொசைட்டியில் தாக்கல் செய்யாமல் பல கோடி ரூபாய் முறைகேடாக செலவு செய்துள்ளனர்.இது தொடர்பாக பல புகார்களை சங்கத்தின் சார்பில் முன்னாள் கவர்னர்கள் கிரண்பேடி மற்றும் தமிழிசை ஆகியோருக்கு பலமுறை தெரிவித்தும், மாநில விளையாட்டு கவுன்சிலின் குறைகளை சீர் செய்யாமல், கவுன்சிலை மூடிவிட்டு, புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் என்ற அமைப்பை மூன்றாண்டிற்கு முன் ஏற்படுத்தினர். இந்த புதிய அமைப்பினால் விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்கங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது.இந்த ஆணையத்தின் இயக்குநர், உறுப்பினர் செயலர் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் விளையாட்டு கவுன்சில் ஊழியர்களாவர். பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தப்பட்ட விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை தடை செய்துவிட்டு, மாநில விளையாட்டு கவுன்சிலில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து நேர்மையான விசாரணை நடைபெற சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ