மேலும் செய்திகள்
முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா
12-Sep-2026
மாணவர்களுக்கு வரவேற்பு
06-Oct-2026
பாகூர்: பிள்ளையார்குப்பத்தில் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, இந்திய மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் ‘செனித் – 2026’ என்ற தலைப்பில் கல்லுாரி விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் புனிதா ஜோஸ்பின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாலாஜி வித்யா பீத் பல்கலைக் கழக துணை வேந்தர் பாலக்கிருஷ்ணன், இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு, செவிலியர் சேவையின் முக்கியதுவம் குறித்து பேசி, விருது பெற்ற மாணவர்களை பாராட்டினர். துணை முதல்வர் பேராசிரியர் சுமதி நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
12-Sep-2026
06-Oct-2026