உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோலா மீன் சீசன் துவக்கியது.

 கோலா மீன் சீசன் துவக்கியது.

காரைக்கால்: காரைக்காலில் கோலா மீன் சீசன் துவங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் தினம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இதனால் மீனவர்கள் வலையில் பல்வேறு மீன்கள் கிடைக்கிறது. இந்நிலையில் தடைகாலம் துவங்குவதற்கு முன் கடலில் மீன் இனப்பெருக்கம் அதிகரிக்கு நிலையில் குறைந்த துாரத்தில் சென்று பைபர் படகு, கட்டுமரம் மூலம் மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். கடந்த இருதினங்களாக மீனவர்கள் வலைகளில் கோலா மீன்கள் அதிகம் கிடைக்கிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோலா மீன் அதிகம் கிடைக்கவில்லை என்று மீனவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை