உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடோ தற்காப்பு பயிற்சி முகாம்

கூடோ தற்காப்பு பயிற்சி முகாம்

புதுச்சேரி: மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அங்கீகாரம் பெற்ற இந்திய கூடோ பெடரேஷனின் புதுச்சேரி மாநில கூடோ தற்காப்பு கலை சங்கம் சார்பில், இரண்டு நாட்கள் கூடோ பயிற்சி முகாம் நடந்தது. முத்தியால்பேட்டை தனியார் திருமண நிலையத்தில் நடந்த முகாமிற்கு,சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் வளவன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். அகில இந்திய கூடோ சங்க தலைமைப் பயிற்சியாளர் ஆரோக்கியராஜ் வாழ்த்தி பேசினார். மூத்த பயிற்சியாளர்கள் பிரியங் ராணா, செல்வம், செந்தில்வேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு கூடோ வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சர்வதேச கேரம் நடுவர் சதீஷ், ரங்கநாதன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை