உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி

பாகூர்: பஸ் ஏற முயன்றபோது, தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம, தந்தை பெரியார் வீதியை சேர்ந்தவர் ராஜகுமரன் 32; கூலி தொழிலாளி. இவர் வடலுாரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக, முள்ளோடை சந்திப்பு நிறுத்தத்தில், பஸ்சில் ஏற முயன்றார். டிரைவர் ராஜகுமரன், ஏறுவதை கவனிக்காமல் பஸ்சை வேகமாக இயக்கி உள்ளார். அப்போது, நிலை தடுமாறி ராஜகுமரன் கீழே விழுந்தபோது, அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. படுகாயமடைந்த அவரை, பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !