உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிக்னல்களில் பெரிய ரவுண்டானாக்கள்... தேவையா? சுற்றளவை குறைத்தால் நெரிசலுக்கு தீர்வு

சிக்னல்களில் பெரிய ரவுண்டானாக்கள்... தேவையா? சுற்றளவை குறைத்தால் நெரிசலுக்கு தீர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில்தலைவர்களின் சிலையை சுற்றியுள்ள ரவுண்டானா அகலத்தை குறைத்தால்,பிரதான சாலைகளில்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும்.புதுச்சேரியில் போக்கு வரத்து நெரிசல் என்பது இன்றைக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. எந்த தெரு வழியாகவும், வாகனங்களில் செல்ல முடியவில்லை.வார விடுமுறையில் மட்டும் அல்ல, மற்ற நாட்களில் கூட நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து திணறுகிறது. எங்காவது வாகனங்களில் போய்விட்டு, வீடு திரும்புவதற்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, படாதபாடு படவேண்டியுள்ளது. எதற்கு வெளியே வந்தோம் என்று மூடு அவுட்டாகி எரிச்சலுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது.குறிப்பாக, இந்திரா, ராஜிவ், வெங்கடசுப்ப ரெட்டியார் உள்ளிட்ட சிக்கனல்களை கடப்பது என்பது பெரிய சவாலாக மாறிவிட்டது.இந்த சிக்னல்களில் தினமும் எந்நேரமும் உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் பல கி.மீ., தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன.பச்சை விளக்கு விழுந்து சிக்னலை கடப்பதற்குள் அடுத்த ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது. பல நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தால் மட்டுமே நத்தை வேகத்தில் அங்குலம் அங்குலமாக கடந்து இந்த சிக்னல்களில் இருந்து தப்பிக்க முடியும்.இந்த சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மட்டும் காரணம் அல்ல. ரவுண்டானா சுற்றளவு அதிகமாக இருப்பதே, போக்குவரத்து நெரி சலுக்கு முக்கிய காரணம்.ரவுண்டானா சுற்ற ளவை பாதியளவு குறைத்தால் இந்த சிக்னல்களில் ஒரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.இந்த சிக்னல்களின் நடுவில் உள்ள தலைவர்களின் சிலையை சுற்றி அழகுபடுத்த, பல ஆண்டிற்கு முன்பு 25 அடி அகலம், 30 அடி நீளத்திற்கு நீள்வட்ட வடிவில் ரவுண்டானா, நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்கப் பட்டது. அந்த காலகட்டத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரிய ரவுண்டானாக்களால் பிரச்னை எழவில்லை.ஆனால், தற்போது, வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ள சூழ்நிலையில், ரவுண்டானாவின் சுற்றளவு பெரிதாக உள்ளதால், சிக்னலில் நிற்கும் வாகனங்கள் உடனடியாக கடந்து செல்ல முடியவில்லை. இதனால் இந்த சிக்னல்களில் வாகன போக்குவரத்துக்கு நெரிசல் எந்நேரமும் உச்சக்கட்டமாக உள்ளது.புதுச்சேரி சிறிய பரப்பளவு கொண்ட மாநிலம். இதற்கு மேல் இனி இங்கு சாலைகளை விரிவுபடுத்தவும் முடியாத சூழல் உள்ளது. சாலைகளை விரிவுப்படுத்த போதிய இடவசதியும் சுத்தமாக இல்லை.எனவே, இந்த சிக்கனல் களில் தலைவர் களின் சிலையை சுற்றி யுள்ள ரவுண்டானா அக லத்தை குறைத்து,சாலைகளை விசாலமாக்கினால் மட்டுமே போக்குவரத்தை நெரிசலை தடுக்க முடியும். அது மட்டுமே நிரந்தர தீர்வு.அப்போது தான் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் இந்த சிக்னல் களை சிரம மின்றி விரைவாக கடந்து செல்ல முடியும்.

அரசியல் கட்சிகள்ஒத்துழைக்க வேண்டும்

ரவுண்டானா விஷயத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய கூடாது.தலைவர்களின் சிலைகளை சுற்றியுள்ள ரவுண் டானாக்களின் சுற்றளவை தான் பொதுமக்கள் குறைக்க சொல்லுகின்றனர்.தலைவர்களின் சிலைகளை முழுமையாக அகற்ற சொல்லவில்லை. எனவே மக்களின் நலன் கருதி ரவுண்டானாக்களின் சுற்றளவு அகலத்தை குறைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
ஜன 13, 2025 21:13

சிலைகளை எல்லாம் நகர்த்தி ஒரே இடத்தில், ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாக ஒரே இடத்தில் நட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. பார்ப்பவர்கள் பார்க்கட்டும். மாலை போடுபவர்கள் போடட்டும். சுற்றி கடைகள் வைக்கலாம். எப்படி இது?


Arul
ஜன 13, 2025 14:11

மேம்பாலம் ஏற்படுத்தினால் சிக்கல்கள் குறைய வாய்ப்பு உண்டு...


karthik
ஜன 13, 2025 09:07

தவறான அறிவுறுத்தல்... rount about என்பது அகலகமாக இருப்பது மிகஅவசியம்.. மக்களுக்கு சாலையை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை அது தான் பிரச்சனை.


Martin
ஜன 13, 2025 14:46

well Said


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை