உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

 தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தொழுநோய் உதவி இயக்குரகம் சார்பில் காந்தி நினைவு நாளையொட்டி, தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கம்பன் கலையரங்கத்திலிருந்து ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தார். ஊர்வலம், அண்ணா சாலை, நேரு வீதி, மிஷின் வீதி வழியாக சென்று இறுதியாக கடற்கரை சாலை காந்தி சிலை அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் பி.கே.வி., செவிலியர் கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்று தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஏற்பாடுகளை பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், கவிதா மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ