உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏலம் போகாத கிருமாம்பாக்கம் கடையில் சாராய விற்பனை ஜோர்

ஏலம் போகாத கிருமாம்பாக்கம் கடையில் சாராய விற்பனை ஜோர்

புதுச்சேரி: ஏலம் போகாத கிருமாம்பாக்கம் சாராயக்கடையில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன. சாராய கடைகளுக்கு மாத கிஸ்தி தொகை நிர்ணயிக்க 3 ஆண்டிற்கு ஒரு முறை கலால் துறை மூலம் பொது ஏலம் விடப்படும். அதன்படி கடந்த ஜூலை மாதம் கடைகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இதில், கிருமாம்பாக்கம் சாராயக்கடை ஏலம் போகவில்லை. ஏலம் போகாத கிருமாம்பாக்கம் சாராயக்கடையில் சில மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக சாராயம் கொண்டு வந்து தினசரி விற்பனை செய்து வருகின்றனர்.சாராயக்கடை ஏலம் விட்டால் கலால் துறைக்கு மாதந்தோறும் பல லட்சம் கிறிஸ்தி தொகையாக வருவாய் கிடைக்கும். கிருமாம்பாக்கம் சாராயக்கடையை ஏலத்தில் எடுக்காமல், அங்கு கள்ளத்தனமாக விற்பதால் அரசுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை உணராமல் கள்ளத்தனமாக சாராயம் விற்போது மீது அங்குள்ள போலீசாரும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. இதனால் கிஸ்தி தொகை செலுத்தாமல் சாராய கடை நடத்தும் நபருக்கு, அரசுக்கு செல்ல வேண்டிய வரி வருவாய் செல்லும் என்பது குறிப்பிடதக்கது. எனவே, ஏலம் போகாத கிருமாம்பாக்கம் சாராய கடையில் கள்ளத்தனமாக நடக்கும் சாராய விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை