உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நாட்களில் மது கடைகள் மூடல்

 ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நாட்களில் மது கடைகள் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை தினத்தையொட்டி, அனைத்து வகையான மதுபான கடைகளும் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும், மே 4ம் தேதியும் மூடப்படும். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலை நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்தும் பொருட்டு, கலால் விதிகள் 1970ன் கீழ், புதுச்சேரி, மாகே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள சாராயம், கள் மற்றும் மதுபான கடைகள், பார்கள், மது பரிமாறி உரிமம் பெற்ற உணவகங்கள் ஆகிய அனைத்தும், ஓட்டுப் பதிவு தினத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கையையொட்டி, மே 4ம் தேதியும் மூடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை