உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி

காங்., உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி

அரியாங்குப்பம்: உள்ளாட்சி மூலம், ஜனநாயகமும், உள்ளூர் வளர்ச்சி என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, அரியாங்குப்பத்தில், ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், தேசிய தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல் முகாமை துவக்கி வைத்தார். மாநில தலைவர் அமுதரசன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தலை, என்.ஆர்., காங்., அரசு உடனடியாக நடத்த வேண்டும். இந்த தேர்தல் மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சாமானிய மக்கள் பதவிக்கு வரவேண்டும். தேர்லை நடத்த வில்லை எனில், பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டது. முகாமில், முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், மூத்த துணை தலைவர் தேவதாஸ் உட்பட காங்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ