உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லாட்டரி சீட்டு விற்றவர்  கைது

 லாட்டரி சீட்டு விற்றவர்  கைது

புதுச்சேரி: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். உறுவையாறு பொறையாத்தம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கோவில் அருகே ஒருவர் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் பெத்துசெட்டிப்பேட்டைச் சேர்ந்த இளங்கோ, 52, என்பதும், இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 4,200 ரொக்கம், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி