உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உறியடி உற்சவம் :மாஜி அமைச்சர் பங்கேற்பு 

உறியடி உற்சவம் :மாஜி அமைச்சர் பங்கேற்பு 

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடந்தது. புதுச்சேரி, காந்தி வீதியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, வரதராஜப் பெருமாள் கிருஷ்ணர் அவதாரத்தில், வீதியுலா வந்து உறியடி உற்சவம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த சிறுவர், சிறுமியர்களின் ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை