உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பஸ் நிலையத்தில் ஆண் சடலம்

 பஸ் நிலையத்தில் ஆண் சடலம்

புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில் இறந்த கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி புது பஸ் நிலையத்தில் சென்னை பஸ் நிற்கும் பிளாட் பாரத்தில் 60 வயது மதிக்கத் தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !