உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சண்டையை விலக்கி விட்டவரின் ஆட்டோவை எரித்தவருக்கு வலை

சண்டையை விலக்கி விட்டவரின் ஆட்டோவை எரித்தவருக்கு வலை

புதுச்சேரி: சண்டையை விலக்கிவிட்டவரின் ஆட்டோவை தீ வைத்து எரித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, ராஜா நகர், தியாகராஜர் வீதியை சேர்ந்தவர் சசி (எ) சிவக்குமார்,47; ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 2ம் தேதி இரவு, ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் 3ம் தேதி அதிகாலை திடீரென ஆட்டோ தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த சிவக்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், அதேப் பகுதியை சேர்ந்த விஜய், ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பது தெரிய வந்தது. விசாரணையில் சில தினங்களுக்கு முன் சிவக்குமாரின் நண்பரான அதேப்பகுதியை சேர்ந்த பாஸ்கரிடம், விஜய் தகராறு செய்தார். அதனை சிவக்குமார் விலக்கிவிட்டு விஜயை திட்டி அனுப்பியுள்ளார். அதில், ஆத்திரமடைந்த விஜய், சிவக்குமார் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விஜயை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !