உள்ளூர் செய்திகள்

மாங்கனி திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடந்தது. புதுச்சேரி சிறுத் தொண்ட நாயானார் திருத்தொண்டு சபை சார்பில் 24ம் ஆண்டு மாங்கனி திருவிழாநேற்று நடந்தது. புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீ ஸ்வரர் கோவிலில் விழா காலை 9 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சியில், வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி, காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து காரைக்கால் அம்மையார் மாங்கனித்தேரில் கோவில் உள்புறப்பாடு நடந்தது. இதையடுத்து, தீபாராதனை, மாங்கனி மற்றும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு எடுத்தருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றார் என்ற தலைப்பில், மாதவன் பேசினார். ஏற்பாடுகளை சிறுத்தொண்டநாயானார் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !