சதுப்புநில காடுகள் பாதுகாப்பு தினம்
புதுச்சேரி : சர்வதேச சதுப்புநில காடுகள் பாதுகாப்பு தினம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கலை மற்றும் கைவினை கிராமத்தில் நடந்தது. சதுப்புநில மரங்கள் கடற்கரை அரிப்பைத் தடுப்பது மட்டுமின்றி, பல்வேறு மீன் இனங்களுக்கு வாழ்விடமாக இருந்து, கார்பன் சேமிப்பு மற்றும் உயிரியல் பல்வகைத் தன்மையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வளங்களை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண் டும் ஜூலை 26ம் தேதி, சர்வ தேச சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் புதுச்சேரி தொண்டு நிறுவனம் இணைந்து, கலை மற்றும் கைவினை கிராமத்தில், சர்வதேச சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. திட்ட அலுவலர் நித்தியா வரவேற்றார். நாட்டு நலப்பிணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் துவக்க உரையாற்றினார். மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஷ்குமார் நோக்கவுரையாற்றினார். யுனிவர்சல் ஈகோ பவுண்டேஷன் நிறுவனர் புபேஷ் குப்தா சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பேச்சு, முக ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சதுப்புநிலப் பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மரக்கன்று நடப்பட் டது. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்ப அலுவலர் தினேஷ் நன்றி கூறினார்.