உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதல்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தில் மதிப்பிடுதல் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு முறை குறித்து, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு பாட வாரியான பயிற்சி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் மற்றும் புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நடந்தது. வாசவி பள்ளி முதல்வர் மாரிமுத்து தலைமையில் மூத்த ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை துணை இயக்குநர் (பெண் கல்வி) சிவராமரெட்டி, புதுச்சேரி முதன்மை கல்வி அதிகாரி மோகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை