உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி, பாரதி வீதியில் உலக முத்து மாரியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 108 பால் குட ஊர்வலம் நடந்தது. பால்குடங்கள் தம்பு நாயக்கர் வீதி, அண்ணா சாலை, லுாயி பிரகாசம் வீதி, பாரதி வீதி வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார், நிர்வாகிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !