உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மினி கப்பல் கட்டும் பணி உப்பளம் துறைமுகத்தில் ஜரூர்

 மினி கப்பல் கட்டும் பணி உப்பளம் துறைமுகத்தில் ஜரூர்

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் (மினி சப்மெரின்) ஆழ்கடலின் அழகை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் நவீன படகுகள் மற்றும் தனிநபர் சொகுசு படகுகள் புதிதாக கட்டுவது மற்றும் பெரிய பார்ஜி, சிறிய ரக பயணிகள் கப்பல்களின் பழுது நீக்கும் தளமாக செயல்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள நெரிசல் இல்லாத பெரிய இட வசதி, திறன் வாய்ந்த பணியாளர்கள், துறைமுகத்திற்கான குறைந்த வாடகை கட்டணம், உடனடியாக அணுகக்கூடிய துறைமுக அதிகாரிகள் என, போன்ற வசதிகள் இங்கு உள்ளதால், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா படகு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணிகளை செய்வதற்கு புதுச்சேரிக்கு வர தொடங்கி உள்ளன. அதைத் தொடர்ந்து, ஆழ்கடலில் பணியில் ஈடுபட்டு வரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (ஓஎன்ஜிசி) ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் மற்றும் பொருட்களை கடலில் கொண்டு செல்வதற்கு 'மினி கப்பல்' ஒன்றை இயக்க உள்ளது. அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதுச்சேரி பி.என்.டி.மரைன் கிராப்ட்ஸ் நிறுவனம் 99 அடி நீளம், 23 அடி அகலம், 23 அடி உயரம் கொண்ட மினி கப்பலை அலுமினியத்தில் உப்பளம் துறைமுகத்தில் உருவாக்கி வருகிறது. 30 பேர் பயணம் செய்யும், இந்த கப்பலில் ஐந்து தங்கும் அறை, உணவுக்கூடம், கழிப்பறை வசதிகள், பொருட்களை கொண்டு செல்வதற்கான இட வசதி உள்ளிட்டவைகளுடன் கட்டப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த கப்பல் வழங்கப்பட உள்ளதால் இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை