உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மினி விளையாட்டரங்கு கட்டுமான பணி ; முதல்வர் ரங்கசாமி ஆய்வு

மினி விளையாட்டரங்கு கட்டுமான பணி ; முதல்வர் ரங்கசாமி ஆய்வு

புதுச்சேரி: அண்ணா மினி விளையாட்டரங்கு கட்டுமான பணியை பார்வையிட்ட முதல்வர், ஜனவரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அண்ணா திடலில், ரூ. 9.6 கோடி மதிப்பீட்டில், மினி விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றி நகராட்சி கடைகள் கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. ஸ்மார்ட் சிட்டி மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே சமூகமான உறவு இல்லாததால் கட்டுமான பணி இழுப்பறியாக இருந்தது. இந்நிலையில், விளையாட்டரங்கம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், ஸ்மார்ட் சிட்டி இணை தலைமை செயல் அலுவலர் ருத்ரகவுடு, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, ஸ்மார்ட் சிட்டி தலைமை தொழில்நுட்ப அலுவலர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் துளசிங்கம், மேலாளர் மார்சல் சகாயநாதன் உடனிருந்தனர். ஆய்வின்போது, லப்போர்த் வீதி மற்றும் சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் கட்டப்பட்டுள்ள கடைகள் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அண்ணா சாலை மற்றும் குபேர் பஜார் கடைகள் மட்டும் கட்டுமான பணியும், திடலின் மையத்தில் மண் நிரப்பும் பணியும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு அரங்கம் மற்றும் கடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். ஜனவரி மாதம் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ