உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிமென்ட் சாலை பணி :அமைச்சர் துவக்கி வைப்பு

 சிமென்ட் சாலை பணி :அமைச்சர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுகுப்பம் அட்வகேட் சின்னத்தம்பி வீதியில் உள்ள பிரான்ஸ்வா மர்தென் வீதியில் இருந்து மூன்றாவது குறுக்கு வீதி வரை உள்ள சிமென்ட் சாலை உயர்த்தி அமைக்கப்பட உள்ளது. இதற்காண பணியினை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் பழனிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை