உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் கராத்தே போட்டி அமைச்சர் துவக்கி வைத்தார்

காரைக்காலில் கராத்தே போட்டி அமைச்சர் துவக்கி வைத்தார்

காரைக்கால்: காரைக்காலில் இன்டர் நேஷனல் வி.ஆர். ஏஸ்., மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் கராத்தே போட்டியை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.காரைக்கால் புறவழிச்சாலை உள்விளையாட்டு அரங்கில் இன்டர் நேஷனல் வி.ஆர்.ஏஸ்., மார்ஷியல் ஆர்டஸ் அகாடமி மற்றும் ஜாப்பனீஸ் கோஜூரியு ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நேஷனல் கராத்தே மற்றும் குபுடோ சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.அமைச்சர் திருமுருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார். ஆக்கூர் கலைமகள் மெட்ரிக் பள்ளி முதல்வர் சிவக்குமார், முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகன் முன்னிலை வகித்தனர்.இன்டர் நேஷனல் வி.ஆர்.ஏஸ்.,மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் குமார் வரவேற்றார்.தலைமை நடுவராக கேரளாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜோதி நாத், தமிழகத்தை சேர்ந்த செல்லபாண்டியன், புதுச்சேரி செண்பகவள்ளி, ஏசுராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ், அபிராமி நேஷனல் உயர்நிலை பள்ளி முதல்வர் நித்யா, புதுச்சேரி நுஞ்சாக் அசோசியேஷன் பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர். போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ