உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி :உருளையன்பேட்டை தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் சார்பில், ரூ. 73 லட்சம் செலவில்,உருளையன்பேட்டை தொகுதி, புதுப்பாளையம் வார்டு,ராஜா நகர், தியாகராஜன் வீதி,அன்னை தெரேசா வீதி,ராஜா நகர் முதல் தெரு,ராஜா நகர் 2வது தெரு மற்றும் ராஜராஜன் வீதிகளில்சிமென்ட் சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது.இதற்கான பூமி பூஜை நடந்தது. நேரு எம்.எல்.ஏ., பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.ஆதிதிராவிட நலத்துறை செயலர் முத்தம்மாள், இயக்குனர் இளங்கோவன், ஆதிதிராவிட வரைநிலை கழகம் செயற்பொறியாளர்பக்தவச்சலம்,ஆதிதிராவிடர் வரைநிலை கழக மேலாண் இயக்குனர் சிவகுமார், இளநிலை பொறியாளர்முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை