மேலும் செய்திகள்
ரூ. 30.71 லட்சத்தில் சிமென்ட் சாலை
08-Jul-2025
வில்லியனுார்: ஒதியம்பட்டு காலனி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ. 27:86 லட்சம் செலவில் ஒதியம்பட்டு காலனி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோ, தி.மு.க நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, செல்வநாதன், ஜனார்தனன், சரவணன், அங்காளன், அரிகிருஷ்ணன், மில்ட்ரி முருகன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
08-Jul-2025