சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வில்லியனுார்: ஊசுடு தொகுதி கூடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தார்.புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஊசுடு தொகுதி கூடப்பாக்கம் பேட் நடுத்தெரு, புதுபேட் உள்ளிட்ட பகுதி யில் ரூ.60.75 லட்சத்தில் சிமென்ட் சாலை, ரூ.1:18 கோடி செலவில் தொண்டமாநத்தம் தீப ஒளி பள்ளி முதல் தேரடி வரை கழிவு நீர் வாய்க்கால், தொண்ட மாநத்தம் எஸ்.எஸ்., நகரில் ரூ.57.30 லட்சத்தில் சிமென்ட் சாலை, சேதராப்பட்டு விநாயகர் கோவில் முதல் மின்துறை அலுவலகம் வரை ரூ.87.30 லட்சம் ரூபாயில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை அந்தந்த பகுதியில் நடந்தது.நிகழ்ச்சியில் சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர்கள் குலோத்துங்கன், அருண்ஆனந்த் மற்றும் தேவா, பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், நிர்வாகிகள் முரளி, மல்லிகா, உலகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.