மேலும் செய்திகள்
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
4 minutes ago
புதுச்சேரி: மீன் வியாபாரிகளுக்கான இடம் ஒதுக்கீட்டு உத்தரவினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி நகராட்சி சார்பில் காசிம் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிக்காசு செலுத்தி வியாபாரம் செய்து வரும் மீன் வியாபாரிகளுக்கு மாத வாடகை அடிப்படையில் உரிமத்தொகை செலுத்தி வியாபாரம் செய்யும் வகையில், இடம் ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அவர்கள் வம்பாகீரப்பாளையம் மீன் வியாபாரிகளுக்கு வழங்கினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கூறும்போது, மீன் வியாபார இடம் ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து முதல்வரிடம் பேசி, புதுச்சேரி நகராட்சி மூலம் இடம் ஒதுக்கீட்டு உத்தரவை பெற்றுத் தந்துள்ளேன் என்றார். இடம் ஒதுக்கீட்டு உத்தரவும் வழங்கியதற்காக, வியாபாரிகள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,வுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற் பொறியாளர் சிவபாலன், வருவாய் துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டனர்.
4 minutes ago