மேலும் செய்திகள்
சாலை, மழைநீர் வடிகால் பணிகள் துவக்கி வைப்பு
30-Oct-2026
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி தக்கக் குட்டை பகுதியில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் குழாய் அமைக்கும் பணியை, நாராயணசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் சார்பில், உழவர்கரை தொகுதிக்குட்பட்ட தக்கக் குட்டை பகுதியில், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிக்களுக்கான பூமி பூஜை விழா இன்று (நவ.,12) நடந்தது. உழவர்கரை எம்.எல்.ஏ., நாராயணசாமி பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
30-Oct-2026