உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்னை தீர்வு காண எம்.எல்.ஏ., கோரிக்கை

அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்னை தீர்வு காண எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: அங்கன்வாடி பணியாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசில் பணி புரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர். அரசுக்காக கடுமையாக பணியாற்றும் இவர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து நிரந்தர பணியாளராக பணிபுரிகின்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஓய்வூதியப் பலன்களை காலத்தோடு அளிப்பதில்லை. மகளிர் மேம்பாட்டு கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 250 மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவதில் முடிவெடுக்காமல் இருப்பது தொழிலாளர் மற்றும் ஊழியர் விரோத போக்காகும். பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தப் பிறகும் பணிக்கொடை வழங்கும் விஷயத்தில் அரசு மேல் முறையீடு செய்வது நியாயமான ஒன்றல்ல. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தாலே பணிக்கொடை என்பது அந்த ஊழியரின் சட்டபூர்வ உரிமையானது.எனவே, அவர்களுக்கு உடனடியாக பணிக்கொடை வழங்க கவர்னர், முதல்வர், துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ