உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேர்தல் நிதிக்காக கட்சி தாவ காத்திருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரியில் பிரதான கட்சிகள் அதிர்ச்சி

 தேர்தல் நிதிக்காக கட்சி தாவ காத்திருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரியில் பிரதான கட்சிகள் அதிர்ச்சி

தே ர்தல் நிதிக்காக இரண்டு இடங்களில் துண்டு போட்டு காத்திருக்கும் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகளால் அனைத்து கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், புதுச்சேரியில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ரூ.5 கோடியில் இருந்து, 7 கோடி வரை செலவிட்டால் மட்டுமே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்த தொகை பலரிடம், இல்லாதாலும், கடந்த தேர்தலுக்காக வாங்கிய கடனுக்கான வட்டியே தற்போது வரை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையிலும், வரும் தேர்தலில் போட்டியிட செலவாகும் தொகையை எப்படி திரட்டுவது என்று புரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். தேர்தல் நிதி பிரச்னைக்கு புதுச்சேரியின் பிரதான கட்சியில் உள்ளவர்கள், தங்கள் இருக்கும் கட்சிகளில் பணத்துடன் சீட்டு கிடைத்தால் நிற்பது, அல்லது எந்த கட்சி நிதியுடன் சீட்டு தருகிறதோ அதில் நிற்பது. இல்லைஎன்றால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அணியில் நிற்பது என, முடிவெடுத்து விட்டனர். பிரதான கட்சிகளில் உள்ள பலர் ரகசியமாக இரண்டு இடங்களிலும் தங்களுக்கான தேர்தல் 'சீட்' மற்றும் நிதியை உறுதி செய்ய தீவிரமாக பேசி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் புதுச்சேரியின் 30 தொகுதிகளில் நிற்பார்கள் என, தெரிகிறது. இதனால் எங்கு பணம் கிடைக்குமோ அந்த கட்சிக்கு தாவ தயாராகி விட்டனர். எம்.எல்.ஏ.,க்களின் இந்த 'தாவல்' செயல் முறையை கண்டு அனைத்துக் கட்சிகளுமே அதிர்ச்சியில் உள்ளன. வரும் தேர்தலில் எந்த கட்சியில் யார் இருப்பார்கள்; யார் வேட்பாளர்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ