உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மொபைட் திருட்டு மர்ம நபருக்கு வலை

 மொபைட் திருட்டு மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி: வீட்டு வாசலில் நிறுத்திருந்த மொபைட்டை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். முத்திரையர்பாளையம் பஜனை மடம் வீதியை சேர்ந்தவர் முரளி, 43. இவர், வில்லியனுார் தனியார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு வீட்டு வாசல் முன், தனது மொபட்டை (பி.ஒ.05 எப். 8257) நிறுத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, மொபைட் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைட்டை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !