உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புத்தாண்டில் அதிகம் பிறந்த பெண் குழந்தைகள்

 புத்தாண்டில் அதிகம் பிறந்த பெண் குழந்தைகள்

புதுச்சேரி: புத்தாண்டு தினத்தில் புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 17 குழந்தைகள் பிறந்துள்ளது. புத்தாண்டு ஜன., 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 10 பெண் குழந்தைகள், 7 ஆண் உள்பட 17 குழந்தைகள் பிறந்தன. இதில், சில குழந்தைகள் சுகப்பிரசவமாகவும், சில சிசேரியன் முறையிலும் பிறந்துள்ளது. மேலும், ஜிப்மர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்தாண்டை போல் இந்தாண்டும் பெண் குழந்தைகள் அதிக அளவில் பிறந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ