உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய் மாயம்: மகள் புகார்

தாய் மாயம்: மகள் புகார்

புதுச்சேரி: புதுச்சேரி, பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி சூடாமணி, 75. இவர் தனது மகள் ஜான்சியுடன் வசித்து வந்தார். கடந்த 27ம் தேதி ஜான்சி வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு வந்தபோது, சூடாமணியை காணவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜான்சி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து சூடாமணியை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், போலீஸ் நிலையத்தை 0413 2292284, 9566969111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி