ஆபரேஷன் சிந்துார் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி
புதுச்சேரி: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), புதுச்சேரி மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மகளிர் பாதுகாப்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் 'ஆபரேஷன் சிந்துார்' முதலாம் ஆண்டு நிகழ்ச்சி புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, இந்திய விமானப்படை ஜூனியர் வாரண்ட் அதிகாரியும், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார். புதுச்சேரி நகர் சங்கசாலக் மனனீய தாமோதரன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., பாரதிய மஸ்துார் சங்கம், ஏ.பி.டி.பி., சேவாபாரதி, சேவிக ஸமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கத்தின் புதுச்சேரி ஜில்லா மகளிர் சமன்வயா குழுவினர் செய்திருந்தனர்.