மேலும் செய்திகள்
வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி
10-Feb-2025
பாகூர்: புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஊரக வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாகூரில் வேளாண் மாணவர்கள், மண் மாதிரி சேகரிப்பு செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலர்கள் பரமநாதன், முத்துக்குமரன், பாஸ்கரன், சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்.வேளாண் கல்லுாரி முதல்வர் முஹம்மத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில், கல்லுாரி மாணவர்கள், மண் பரிசோதனையின் அவசியமும் மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
10-Feb-2025