உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முத்துமாரியம்மன் கோவில் பெருவிழா இன்று துவக்கம்

 முத்துமாரியம்மன் கோவில் பெருவிழா இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா இன்று (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி தினமும் இரவு 7:00 மணிக்கு விமானம், காமதேனு, அன்னம், நாகம், ரிஷபம், யானை, சிங்கம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 31ம் தேதி காலை 8:00 மணிக்கு தேர்உற்சவம், மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 1ம் தேதி இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 8ம் தேதி மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டபாணி, துணைத் தலைவர் கலைவாணி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராஜேஷ், உறுப்பினர் சகாயநாதன் பஸ்கே மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை