உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எனது அஸ்தியை புதுச்சேரியில் கரைக்க வேண்டும் மாஜி கவர்னர் கிரண்பேடி உருக்கம்

எனது அஸ்தியை புதுச்சேரியில் கரைக்க வேண்டும் மாஜி கவர்னர் கிரண்பேடி உருக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி எழுதிய அச்சமற்ற ஆட்சி என்ற நுாலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியிட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.விழாவில் முன்னாள் கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:நான் புதுச்சேரியில் கவர்னராக பொறுப்பேற்றபோது முதல் காரியமாக மக்களுக்கான இலவச ெஹல்ப் லைன் அறிமுகப்படுத்தி, ஊழல் புகார்களை தைரியமாக கொடுக்க செய்யலாம் என்றேன். அதை செய்ய அரசு செயலர்கள் தயங்கினர். ஆனால் அந்த ெஹல்ப் லைனை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு தான் பதவி ஏற்றேன்.பதவி ஏற்றநாளில் எனது பணி எப்படி இருக்கும் என்பதை மக்களிடம் சொல்லவேண்டும் என, நினைத்தேன். அதுவும் நடைமுறை இல்லை என, தடுத்தனர். நான் ரப்பர் ஸ்டாப் இல்லை. மக்களுக்கான கவர்னர் என்று சொல்லி உரையாற்றினேன்.என்னுடைய பணியை மக்களுக்கு எடுத்து சொன்னேன். அதனால் தான், மக்களுக்கும் நம்பிக்கை பிறந்து தைரியமாக வந்து புகார் அளித்தனர். எந்த பணியாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு உண்மையாக இருக்க வேண்டும். எதற்கும் பயப்பட கூடாது. தைரியமாக இருந்தால் ஊழல் ஒழிந்து விடும். புதுச்சேரியில் நான் பணியாற்றிய நாட்கள் உன்னதமானது. இந்த மண்ணையும், மக்களையும் நேசித்து பணியாற்றினேன். நான் எங்கு இறந்தாலும் எனது பெரும்பாலான அஸ்தியை புதுச்சேரியில் தான் கரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ