தேசிய குராஷ் தற்காப்பு கலை போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
புதுச்சேரி; குராஷ் தற்காப்பு கலை போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவர்கள் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.பள்ளிகளுக்கு இடையிலான 68வது தேசிய விளையாட்டு போட்டிகள் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரியில் குராஷ் தற்காப்பு கலை பயின்ற 20 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.இவர்களில், மாணவர்கள் மித்ரன், விஷால் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். பதக்கம் வென்று புதுச்சேரி திரும்பிய மாணவர்கள், குராஷ் தற்காப்பு கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷனி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தொடர்ந்து, பதக்கம் வென்ற மாணவர்கள் மித்ரன், விஷால் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.