உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேட்பாளர் தேர்வு பேச்சு வார்த்தையில் மூத்த தலைவரை தவிர்த்த தேசிய கட்சி

 வேட்பாளர் தேர்வு பேச்சு வார்த்தையில் மூத்த தலைவரை தவிர்த்த தேசிய கட்சி

புதுச்சேரி சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேசிய கட்சியில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நாட்டின் தலைநகரில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்த மூவர் சென்றனர். அவர்களில் இருவர் மட்டுமே பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். கட்சி தலைமையில் மிக நெருக்கமாக இருந்த மூத்த தலைவரை, அவர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றால், தொகுதியை குறைத்து விடுவார் என்பதால், அவரை கிருஷ்ணர் பெயர் கொண்டவர் மூலம் தனிமைப்படுத்தி, வேறு ஒரு அறையில் அமர வைத்துவிட்டு, மற்ற இருவர் மற்றும் மாநில பொறுப்பாளர்களை வைத்து பேசியுள்ளனர். இதனை அறிந்த, மூத்த தலைவரின் ஆதரவாளர்கள் கட்சித் தலைமையின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ