ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி; புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் பாட்சா தலைமை தாங்கினார். பொது செயலாளர் தீபக் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜ்குமார், இணை செயலாளர் செந்தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.கூட்டத்தில், புதுச்சேரியில் 147 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை காரைக்கால், மாகியில் நியமனம் செய்து, அங்கிருந்த ஆசிரியர்களை புதுச்சேரிக்கு இடம் மாறுதல் செய்த கவர்னர், முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்திற்கான ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்த வேண்டும். கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.