உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி பார்வையிட்டு நேரு ஆய்வு

 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி பார்வையிட்டு நேரு ஆய்வு

புதுச்சேரி: கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நேரு பார்வையிட்டார். புதுச்சேரி, கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், அரசு நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைப்பு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதியில் நேயம் மக்கள் கழகம் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற நேரு, அந்தோணியார் கோவில் தெருவில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டு, தரமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார். அப்போது, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் சுதர்சனம், இளநிலை பொறியாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி