மேலும் செய்திகள்
இலவச காஸ் இணைப்பு வழங்கும் பணி துவக்கம்
9 minutes ago
6 மாவட்டங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா
13 minutes ago
தமிழக அரசை கண்டித்து நர்ஸ்கள் உண்ணாவிரதம்
19 minutes ago
புதுச்சேரி: திருநள்ளாறு சனீஸ்வரர் தேவஸ்தான பேஸ்புக்கில் தொடர்ந்து ஆபாச புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதால், புதிய முகநுால் பக்கம் துவங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனீஸ்வரர் தேவஸ்தான பேஸ்புக்கை கடந்த 3ம் தேதி மாலை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து, ஆபாச படத்தை பதிவிட்டனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஆபாச படத்தை நீக்கியதோடு, சனீஸ்வரர் கோவில் முகநுால் பக்கத்தை, ஹேக்கரிடமிருந்து மீட்டனர்.இதையடுத்து கோவிலுக்கு புதிய முகநுால் பக்கம் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'திருநள்ளாறு சனீஸ்வரர் தேவஸ்தான முகநுால் பக்கத்தில் ஆபாச படம் பதிவேற்றம் செய்யாமல் இருக்க சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய முகநுால் பக்கம், கலெக்டர் அனுமதியுடன் துவக்கப்படும் என்றனர்.
9 minutes ago
13 minutes ago
19 minutes ago