உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லாரி மீது பைக் மோதி செவிலியர் பலி

 லாரி மீது பைக் மோதி செவிலியர் பலி

புதுச்சேரி: நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர் இறந்தார். நல்லவாடு, முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிமுருகன் மகன் கலைச்செல்வன், 23; மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 20ம் தேதி 2வது ஷிப்ட் பணிக்கு சென்ற கலைச்செல்வன், இரவு பணி முடிந்து பைக்கில் (பி.ஒய் 01 ஏ.டி 4941) வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். இரவு 8:20 மணிக்கு விழுப்புரம் - நாகப்பட்டினம் பைபாஸ் சாலை, திருபுவனை தனியார் கம்பெனி எதிரே கலைச்செல்வன் வந்து கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானார். படுகாயமடைந்த கலைச்செல்வனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், வில்லியனுார் போக்குவரத்து போலீசார், விபத்திற்கு காரணமான டிப்பர் லாரியின் டிரைவர் சீர்காழி, தென்னங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த ஞானசேகர், 33, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !