உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

 ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் காசநோய் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார். பிரதம மந்திரி 'டி.பி. முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த காசநோய் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வில்லியனுார் தொகுதி ரவிக்குமார் எம்.எல்.ஏ.,பங்கேற்று காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி