உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊட்டச்சத்து உணவுத் திருவிழா

ஊட்டச்சத்து உணவுத் திருவிழா

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து உணவுத் திருவிழா நடந்தது.தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் லலிதா, கோமளா, சாமுண்டீஸ்வரி, இரிசப்பன், கமலக்கண்ணன் வாழ்த்தி பேசினர். பட்டதாரி ஆசிரியர்கள் வீரகதிரவன், சங்கரதேவி, தேவி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், பச்சையம்மாள், குபேரன், சுகந்தி, அமலா ஆகியோர் பாராட்டி பேசினர். முன் மழலையர் பள்ளி ஆசிரியை அருளரசி, சிறப்பு ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி கருத்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில், மாணவர்கள் கொண்டு வந்திருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளை கண்காட்சிப்படுத்தி, அதில் அடங்கி உள்ள ஊட்டசத்துக்கள் குறித்து விளக்கினர். கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சத்துணவுகளை சுவைத்து பார்த்து மதீப்பீடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி